சிவகாசி: விஷமருந்தி பட்டாசு தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே நாரணாபுரம் செல்வகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி முனியப்பன் (50) மயில் துத்தம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற இவர், கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். சம்பவம் அன்று வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி