சிவகாசி: காகிதக் குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் முனியசாமி நகரில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் காகிதக் குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ராமராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த நிறுவனத்தில், பணி தொடங்கும் முன் விளக்கேற்றும் போது விளக்கு தவறி கீழே விழுந்து காகிதங்களில் தீப்பற்றியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காகிதக் குழாய்கள் எரிந்து சேதமடைந்தன.

தொடர்புடைய செய்தி