விருதுநகர்: கடையில் பயங்கர தீ விபத்து (VIDEO)

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பழைய இரும்புக் கடையில் பயங்கர தீ விபத்து. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி சரக்கு வாகனம், டிராக்டர், ஆம்னி கார் தீ விபத்தில் எரிந்து நாசம். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சிவகாசி ரயில்வே பீடர் சாலையில் ஏராளமான அச்சக தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஒரு பகுதியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக்கடை செயல்பட்டு வருகிறது. 

இக்கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள காய்ந்த புள்ளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயானது கடைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி சரக்கு வாகனம், டிராக்டர், ஆம்னி கார் மீது திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் மூன்று வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து சிவகாசி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி