விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கன்னிசேரியில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அதிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது உடன் பிறந்த சகோதரி கஸ்தூரி உள்ளிட்ட இருவர் பலத்த தீக்காயமடைந்தனர். இந்த நிலையில் 3 பேரின் இல்லத்திற்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தனது சொந்த பணத்திலிருந்து தலா 1,50,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு தேவையான நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் தொழிலாளர்களுக்கு விபத்திலிருந்து பாதுகாப்பான பட்டாசு தயாரிப்பு குறித்து அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துக்களைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.