சிவகாசி: மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் சுப்ரமணிய கோயில் தெருவில் வசிக்கும் விஜயராஜன்(62) என்பவர், தனது மகன் செல்வமுருகனை(39) இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த மகனுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. செல்வமுருகனின் உடலைக் கைப்பற்றிய திருத்தங்கல் போலீஸார், தந்தை விஜயராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி