சிவகாசி: இறந்தவரின் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர்..

சிவகாசி நாரணாபுரம் ரோடு முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளரான மாடசாமி (72) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது குடும்பத்தினர் அவரது உடலை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ய முடிவு செய்தனர். இதையொட்டி, தமிழக அரசின் அரசாணையின்படி, சிவகாசி சப்-கலெக்டர் முகமது இர்பான், தாசில்தார் லட்சம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாடசாமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி