சிவகாசி: குடும்ப தகராறு; கணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் இந்திராநகரைச் சேர்ந்த மனோசங்கர் (34) என்ற தொழிலாளி, குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பளப் பணத்தை வீட்டுக்குக் கொடுக்காதது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மனோசங்கர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி