இந்த வழக்கில் திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்த மதனகோபால் 23, தனசேகரன் 23, சூர்யபிரகாஷ் 19, தருண்குமார் 23, முத்துப்பாண்டி 23, ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மார்ச் 21 கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கள்ள காதலி சுந்தரி, வேலுச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுரேஷ் உடன் வசித்து வந்த கள்ளக்காதலி சுந்தரிக்கு, வேலுச்சாமி, தருண் உடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது. மார்ச் 16 ஞாயிறு இரவு வேலுச்சாமி சுரேஷிற்கு மது வாங்கி கொடுத்து வீட்டில் படுக்க வைத்தார். சுந்தரி தருணுக்கு தகவல் அளித்தார். அதன்பின் மதனகோபால், தருண், முத்துபாண்டி, வேலுச்சாமி உள்ளிட்டோர் வந்து சுரேஷை வெட்டிக் கொலை செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சுந்தரி, வேலுச்சாமியை கைது செய்துள்ளோம், என்றனர்.
பின்லாந்து அதிபர் ஸ்டப் இந்தியா வருகை.. மோடியுடன் பேச்சுவார்த்தை