சிவகாசி: கண்ணை கவரும் வாண வேடிக்கை

சிவகாசி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, நேற்று (நவம்பர் 11) மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதைக் கொண்டாடும் விதமாக, மேம்பாலத்தின் அருகே இரவு வானில் சுமார் 20 நிமிடங்கள் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவை பகலாக்கும் வகையில் நடைபெற்ற இந்த வாணவேடிக்கையை சிவகாசி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி