சிவகாசி: அரசு மருத்துவமனையில் தவறி விழுந்த முதியவர் பலி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேல்சாமி (60) என்ற முதியவர், கழிப்பறைக்கு சென்றபோது தவறி விழுந்து தலையில் காயம் அடைந்தார். முதலுதவிக்கு பிறகு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி