சிவகாசி: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

சிவகாசி பிச்சாண்டி தெருவைச் சேர்ந்த 61 வயது மகாலிங்கம், ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீட்டிற்கு திரும்ப பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி