விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மார்ச் 17 மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சிவகாசி நகர், சித்துராஜபுரம், திருத்தங்கல், பாறைப்பட்டி, சாட்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய விடிய விடிய மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.