ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீமுப்பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை ஸ்ரீமுப்பிடாரியம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதனையடுத்து தசரா திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. ஸ்ரீமுப்பிடாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'சிம்ம' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.