இன்று காலை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் செங்கமலப்பட்டியை சேர்ந்த வின்னர் இந்தியா அணியும், எம்.புதுப்பட்டியை சேர்ந்த இளம்புயல் அணியும் மோதியது. இதில் செங்கமலப்பட்டி வின்னர் இந்தியா அணி வெற்றிபெற்றது. இந்த அணிக்கு முதல்பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த எம்.புதுப்பட்டி இளம்புயல் அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 3வது பரிசு சாமிநாதம் ஸ்டார் அணிக்கு ரூ.10 ஆயிரம், பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
4வது பரிசு திருத்தங்கல் சண்டே ஸ்டார் அணிக்கு ரூ.6 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் பொன்சக்திவேல், பகுதிக்கழக செயலாளர்கள் அ.செல்வம், கவுன்சிலர் ஸ்ரீநிகா, மாநகர இளைஞரணி செயலாளர் முத்துசெல்வம் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.