மேலும் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண், பெண் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனான அங்கப்பிரதட்சணம் என்ற 'உருண்டு கொடுக்கும்' நிகழ்வை செலுத்தி வருகின்றனர். இதற்காக அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் உடலில் தண்ணீரை ஊற்றியபடி கோவில் வளாகம் மற்றும் நான்கு ரத வீதிகளில் உருண்டு கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்து வருகின்றனர். பெண் பக்தர்கள் உருண்டு கொடுக்கும் போது, அவர்களது உறவினர்கள் சாலையில் தண்ணீர் ஊற்றியபடி ஓம்சக்தி, பராசக்தி என்று பயபக்தியுடன் கோஷமிட்டுப்படி வருகின்றனர். நாளை ஏப்ரல் 6ம் ஞாயிறு கிழமை பொங்கல் திருவிழாவும், வரும் ஏப்ரல் 7ம் தேதி திங்கள் கிழமையன்று அக்கினிச்சட்டி, கயிறுகுத்து திருவிழாவும் நடைபெறுகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்