சிவகாசி: பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த திருத்தங்கலிலுள்ள இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமான கருநெல்லிநாத மீனாட்சி அம்பிகை ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா நேற்று (ஜூன் 8) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களான இளநீர், பால், தயிர், மஞ்சள், பன்னீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 

பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வெள்ளிக்கவசம் அணிவித்து வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்தப் பிரதோஷ விழாவில் திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிவன் பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வணங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி