சிவகாசி அருகே விஸ்வநத்தம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் கிருஷ்ணன் (39), நில விற்பனை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது, பழையவெள்ளையாபுரத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் சிலர் அவரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். ஆசிரியர் கிருஷ்ணன் தப்பி ஓடியபோது தடுமாறி விழுந்துள்ளார். கும்பல் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வம் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.