சிவகாசி: மாமன்ற உறுப்பினர்கள் போலீஸில் புகார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மார்ச். 18 ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பிஜேபி கவுன்சிலருக்கும், காங்கிரஸ் கவுன்சிலருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தின் போது பிஜேபி கவுன்சிலர் குமரி பாஸ்கர் தன்னை அவமரியாதையாக பேசி தாக்கியதாக, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ரவிசங்கர் புகார் கொடுத்தார். 

இதேபோன்று காங்கிரஸ் கவுன்சிலர் மீதும் பிஜேபி கவுன்சிலர் குமரி பாஸ்கர் புகார் அளித்துள்ளார். மேலும் இந்தப் புகார்கள் குறித்து சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் இரண்டு கவுன்சிலர்களும் அழைத்து அவர்களிடம் டிஎஸ்பி பாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தங்களது புகார் மனுக்களை கவுன்சிலர்கள் வாபஸ் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி