அப்போது 2 வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளிலிருந்து ரூ20 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் தெற்கு ரத வீதியில் அதிகாரிகள் ஆய்வின்போது அந்த பகுதியில் இருந்த ஒரு மிட்டாய் கடையில் பிளாஸ்டிக் மாற்றுப்பொருளாக பனை ஓலைப்பெட்டியில் இனிப்பு பலகாரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதை கண்ட மாநகர் நல அலுவலர் சரோஜா, மிட்டாய் கடை உரிமையாளரை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். மேலும் அந்த கடை உரிமையாளருக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார்.