சிவகாசி: இருதரப்பு குடும்பத்தினர் மோதல்; 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செவளூரில் குடும்பப் பிரச்சனை காரணமாக மாமியார் லட்சுமி (61) அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மருமகள் முருகேசுவரி (39), அவரது தம்பி சங்கிலிபாண்டியன் (36), தாய் பஞ்சவர்ணம் (66) ஆகியோர் மீது எம். புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மருமகள் தன் மகனுடன் தாய் வீட்டிற்கு வந்த நிலையில், அவரை அழைத்துச் செல்லச் சென்ற மாமியார், கணவர், மைத்துனர் ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி