இன்று காலையிலிருந்து வழக்கமான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென்று பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. சிவகாசி நகர் பகுதி, புறநகர் பகுதி, திருத்தங்கல், சசி நகர், சித்துராஜபுரம், பேர்நாயக்கன்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் வெட்கை தணிந்து குளிர்ச்சியான காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசி மற்றும் திருத்தங்கல்லில் பங்குனிப் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. பொங்கல் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் நடைபாதைகளில் தாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள பொருட்களை குவித்து வைத்துள்ளனர். திடீர் மழையால் நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் திருவிழா காலத்தில் வியாபாரம் செய்து பிழைக்க வந்த நடைபாதை வியாபாரிகள் சற்று கவலையடைந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்