சிவகாசி அருகே பழைய இரும்பு கடையில் கல்லாவில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் பணம், விலை உயர்ந்த செல்போன் மற்றும் உண்டியல் காசுகளை ரோலிங் சேரில் அமர்ந்து திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரின் கடையில் கடந்த 2ம் தேதி பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அண்ணா காலனியை சேர்ந்த குருசாமியை (21) கைது செய்தனர்.