சிவகாசி அருகே ஈஞ்சார் பகுதியில் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரத் (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்த பேருந்து, பெட்ரோல் பங்கிலிருந்து சாலையை நோக்கி வந்த மாணவரின் இருசக்கர வாகனம் மீது மோதி, பின்னர் சரக்கு லாரி மீது ஏறி நின்றது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.