விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி குணசேகரன் (45), தனது மகளை காதலித்த தினேஷ் என்பவரால் தாக்கப்பட்டார். குணசேகரனின் எதிர்ப்பு மீறி காதலை வளர்த்த தினேஷ், குணசேகரனின் வீட்டிற்கு வந்து தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயம் அடைந்த குணசேகரன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.