சிவகாசி: இரத்ததான முகாம்; முன்னாள் அமைச்சர் KTR பங்கேற்பு

சிவகாசியில் அதிமுக சார்பில் ரத்ததான முகாம். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் ஏராளமானவர்கள் ரத்ததானம். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாமிற்கு இன்று மே 10 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முகாமில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரத்ததானம் அளித்தவர்களை பாராட்டி கௌரவித்து ஊட்டச்சத்து பொருட்களுடன் சான்றிதழையும் வழங்கினார். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி