விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பேருந்து நிலையத்தின் முன்பாக பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜகவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.