சிவகாசி: தலைவருக்கு அமைச்சர் மரியாதை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா மாநகர திமுக சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவியருக்கு இலவச சீருடையுடன், நோட்டு புத்தகங்களையும், கல்வி உபகரணங்களையும், மற்றும் ஏழை- எளியோருக்கு இலவச வேட்டி, சேலைகளையும், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகளையும், ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும் அமைச்சர் வழங்கினார். 

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 500 துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச அரிசிப்பை வழங்கப்பட்டதை அடுத்து அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அசைவ உணவை அமைச்சர் பரிமாறினார்.

தொடர்புடைய செய்தி