விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பள்ளி மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகாபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்த இப்பேரணி, காமராஜர் பூங்காவிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக காரனேசன் காலனி வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நல மற்றும் சமூக பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.