சம்பவத்தன்று சின்னபால்மணி வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு கடையில் படுத்திருந்த போது அங்கு வந்த கருப்பசாமி, லோடுமேன் சங்கத்தின் பொறுப்பாளர் பதவியை தனக்கு விட்டுத்தர கேட்டு தகராறு செய்து சின்னபால்மணியை இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சின்னபால்மணி சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் கருப்பசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி