ஆறாம் திருவிழாவான வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் வாண வேடிக்கை மற்றும் மேளதாள முழங்க அம்மன் வீதி உலா நடைப்பெற்றது. நேர்த்தி கடன் செலுத்தும் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் வரும் ஏப்ரல் 06ம் தேதி (ஞாயிறு கிழமை) பொங்கல் திருவிழா நடைபெறுகிறது.
பங்குனி பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திருவிழா 10ம் தேதி (வியாழன் கிழமை) காலை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.