விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தேர்தலில் ஒன்றுபட்டு முழுமூச்சுடன் களப்பணியாற்றி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.