விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் 2வது மண்டல பகுதியில், அதிமுக - NDA கூட்டணியின் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே. டி. இராஜேந்திரபாலாஜி, ஆலாவூரணி, சிறுவர் பூங்கா தெரு, பசும்பொன்நகர், பெரியார் காலனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று, தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.