சிவகாசியில் நடைபெற்ற அதிமுக ஒன்றிய பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பதில் சந்தேகமில்லை என்றும், தமிழ்நாட்டு மக்கள் இந்த கூட்டணியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஜனவரி முதல் பல கட்சிகள் அதிமுகவிற்கு ஆதரவு தர உள்ளதால், பலமான கூட்டணியுடன் 220 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அவர் கூறினார்.