விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணைக் காதலித்து வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்த அன்றே, இளம்பெண்ணின் தாய், மாமா மற்றும் ஒரு வக்கீல் ஆகியோர் வீட்டிற்கு வந்து இளம்பெண்ணை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இளம்பெண் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த இளைஞர், திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.