விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளபட்டி தெற்கு தெருவில் வசிக்கும் ராஜா (25) என்ற வாலிபர், மது அருந்தியதை வீட்டில் கண்டித்ததால் மனமுடைந்து மாட்டு தொழுவத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நவம்பர் 16 அன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.