சிவகாசி: பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது. பணம் பறிமுதல்.சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் கணேசன் காலனி பகுதியில் திருத்தங்கல் காவல் நிடைய சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் அதே பகுதியை சேர்ந்த மாரிசெல்வம் (40) முனீஸ்வரன் (41), பாண்டித்துரை (39), சுப்புராஜ் (47), ஆரோக்கியராஜ் (35), ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி