நேற்று (மார்ச் 17) அதிகாலை வீட்டில் இருந்த சுரேஷை வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. உடலை மீட்ட போலீசார் இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரிடம் மாரனேரி போலீஸார் விசாரணை நடத்தியதில் மதனகோபால், சூரியபிரகாஷ், தனசேகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.