சிவகாசி: 24 மூட்டை புகையிலை, குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து திருத்தங்கல் செல்லும் சாலையில் உள்ள வேலாயுதரஸ்தா ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சுமார் 24 மூட்டைகள் இருந்தது கண்டுபிடித்தனர். மேலும் பறிமுதல் செய்த புகையிலை மற்றும் குட்காவின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தையும் அதை ஓட்டி வந்த விஸ்வநாதம் பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டதில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து இரண்டு பேரையும் கைது செய்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் நான்கு சக்கர வாகனத்தையும் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி