சிவகாசி: கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதிநகர் பகுதியில் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ பாண்டியராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா வைத்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதாம்பட்டினத்தைச் சேர்ந்த வீரபாண்டி (24), மணிகண்டன் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக திருத்தங்கல் அண்ணா காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வேல்சாமி என்பவரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி