சிவகாசி: 15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கொய்யா தோட்டம் ஒன்று உள்ளது. இந்தத் தோட்டத்தில் வழக்கம்போல் பணியாளர்கள் கொய்யாக்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது கொய்யா மரத்தடியில் பதுங்கி இருந்த சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கொய்யா தோட்டத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த வனத்துறையினர் கொய்யா மரத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

தொடர்புடைய செய்தி