சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தனியார் பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்தப் பேரணி, சிவகாசி நகரின் முக்கிய சாலைகளில் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தையே வந்தடைந்தது. பேரணியின் போது, போதைப் பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி மாணவர்கள் சைக்கிள்களில் சென்றனர்.