விருதுநகர் தீ விபத்தில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

திருத்தங்கல் கண்ணகி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் முருகன் (66), தனது வீட்டின் வாசல் அருகே பழைய பொருட்களை தீயிட்டு எரித்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி