விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலை விபத்தில் செசில்யா அம்மாள் (65) என்ற மூதாட்டி உயிரிழந்தார். திருத்தங்கல் மெயின் ரோட்டில் திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, சிவா (19) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த அவர் மதுரையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.