சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை சாட்சியாபுரத்தில் 30 ஆண்டுகால கோரிக்கையான ரயில்வே மேம்பாலம், 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்துடன் நிறைவடைந்து, இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில், தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மேம்பாலத்தை திறந்து வைத்தனர்.