தரமற்ற கழிவு நீர் கால்வாய் அமைப்பால் பொதுமக்கள் எதிர்ப்பு...

சிவகாசி மாநகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட திருத்தங்கல் முனீஸ்வரன் காலணியில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் இருந்தது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உத்தரவின் பேரில் தற்போது கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தரமற்ற முறையில் கால்வாய் அமைப்பதாக ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி பொறியாளருடன் அப்பகுதிவாசி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி