விருதுநகர்: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி வேண்டி மனு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டையோ அல்லது திருச்சிலியோ உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

இங்கிருந்து செல்லக்கூடிய நோயாளிகள் ஆம்புலன்ஸ் சேவைக்காக வேறு பகுதியிலிருந்து வரும் ஆம்புலன்ஸ்களை காத்திருக்க வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி