சிறுமிக்கு பாலியல் தொல்லை;முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை...

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையைச் சேர்ந்த முத்துப்பாண்டி (77) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நீதிபதி முத்துக்குமாரவேல் விசாரணை நடத்தினார். இதில், குற்றவாளி முத்துப்பாண்டிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி