சாத்தூர்: முதல்வர் அறை கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிஎட் தேர்வு நடைபெறும் நேரத்தில் மர்ம நபர்கள் முதல்வர் அறையின் கண்ணாடியையும், சிசிடிவி கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கப்பட்டபோது, கொடி கம்பத்தை வைத்து இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கல்லூரி வாட்ச்மேன் அளித்த தகவலின் பேரில், சாத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி