விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் காவல் நிலைய சரகத்தில் 28 வயதுடைய பெண்மணி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினரின் துரிதமான மற்றும் சாதுரியமான நடவடிக்கையின் காரணமாக, காணாமல் போன பெண்மணி தேனி அருகே குறுகிய காலத்திற்குள் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.