விருதுநகர்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 360 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான லேப்டாப், ஸ்மார்ட் போன், தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் பெற்றோரை இழந்த 32 மாணவ, மாணவியர்களுக்கு கல்விச் செலவை அரசு ஏற்கும் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி